Monday, February 25, 2008

குறைந்த விலை கார்: களமிறங்குது மாருதி

இந்தியாவில் குறைந்த விலை கார்களை டாடா நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்தி இருந்தாலும், இந்த வகை கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.

கார் தயாரிப்பில் சிறந்து விளங்கும் மாருதி-சுசுகி நிறுவனமும் குறைந்த விலை கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, வரும் 2009ம் ஆண்டு இறுதிக்குள் டாடாவின் நானோ காருக்கு போட்டியாக, 660 சிசி இன்ஜினுடன் கூடிய புதிய காரை, ரூ.1.5 லட்சம் மதிப்பில் மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.

எனினும் இத்திட்டம் குறித்து மாருதி சுசுகி நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என்றாலும், சுசுகி நிறுவனத்திற்கு உதிரி பாகம் தயாரித்து வழங்கும் பிரிவில், குறைந்த விலை காருக்கான பாகங்கள் விரைவில் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.