Monday, February 25, 2008

மொபைல் டிவி குறிப்பிடத்தக்க அளவு வளரும்

நடப்பு ஆண்டில் (2008) மொபைல் டிவி எனும் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சியை எட்டும் என மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் மோடோரோலா உள்ளிட்ட முக்கிய மொபைல் நிறுவனங்கள், மொபைல் டிவி சேவைகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.

மோட்டோரோலாவை பொறுத்தவரை சமீபத்தில் மொபைல் டிவி சாதனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த டி.வி-யில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

மொபைல் டிவி தொழில்நுட்பங்கள், ஒளிபரப்பு முறைகள் மற்றும் வளர்ச்சி குறித்து மோட்டோரோலா நெட்வொர்க் வர்த்தக மேலாளர் வெங்கட் ஈஸ்வரா விரிவாக எடுத்துக் கூறினார்.