Monday, February 25, 2008

சவுதியில் முதலாவது கார் தொழிற்சாலை

வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் முதலாவது கார் தொழிற்சாலை விரைவில் அமையவுள்ளது.

வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருவதை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சவுதியில் உள்ள தமாம் நகரில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையை, சவுதி அரேபிய தொழிற்கூட்டமைப்பு மற்றும் வளைகுடா கார் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து நிறுவுகிறது.

புதிய தொழிற்சாலையில் துவக்கத்தில் சுமார் 15,000 கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் படிப்படியாக 3 லட்சம் கார்களாக உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டில் மட்டும் கார் இறக்குமதி 27 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.