Monday, March 17, 2008

Sunday, March 16, 2008

Wednesday, March 12, 2008

அமெரிக்காவில் ஐ.டி வருவாய் பாதிப்பு

அமெரிக்காவில் ஐ.டி வருவாய் பாதிப்பு

அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே மந்தமடைந்து வருகிறது.

இதனால் அந்த நாட்டை நம்பி இங்கு பிழைப்பு நடத்தும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வருவாய் விகிதத்தில் குறிப்பிடத்தக்க அளவு மந்த நிலை பிரதிபலிக்கலாம் என்று இந்த துறையை சேர்ந்த கணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை துல்லியமாகக் கணிக்க முடியா விட்டாலும் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் 4ம் காலாண்டு வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

டி.சி.எஸ் நிறுவனத்தின் 10 முன்னணி அமெரிக்க வாடிக்கையாளர்களில் இரண்டு நிறுவனங்கள் தங்கள் புரோஜெக்டுகளை தாமதப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அதாவது இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது தகவல் தொழில் நுட்ப செலவினங்களை தாமதப்படுத்துவதாக, டிசிஎஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி சந்திரசேகரன் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

டி.சி.எஸ் மட்டுமல்ல இன்னும் பல முன்னணி நிறுவனங்களுக்கு வந்து சேர வேண்டிய பணிகளும் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 2008ம் ஆண்டு ஐ.டி. நிறுவனங்களுக்கு அவ்வளவு லாபம் தரும் ஆண்டாக இருக்காது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் வங்கிகள் சப் பிரைம் என்ற அநாயச கடன் திருவிழாவை நடத்தி வருவதால் அதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பல வங்கிகள் தங்களது தகவல் தொழில் நுட்ப பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

டிவிஎஸ் `ப்ளேம்' பைக் அறிமுகம்

டிவிஎஸ் `ப்ளேம்' பைக் அறிமுகம்

சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் சர்ச்சைக்குரிய 125 சி.சி திறன் கொண்ட `ப்ளேம்' ரக மோட்டார் பைக் மாற்றியமைக்கப்பட்ட என்ஜினுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ப்ளேம் மோட்டார் சைக்கிளில், தங்கள் நிறுவனத்தின் காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக பஜாஜ் ஆட்டோ குறைகூறியது.

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த பைக்கின் விலை 46 ஆயிரம் ரூபாய் என்றும், சிங்கிள் ஸ்பார்க் என்ஜின் (சிசி-விடிஐ) தொழில்நுட்பத்துடனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவிஎல் நிறுவனத்தின் உரிமையுடன் இந்த வகை என்ஜினை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பதாக டிவிஎஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லிக்கு ஏர் அரேபியா விமான சேவை

ஐக்கிய அரபு எமிரேட்டின் முதலாவது மிகக் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் அரேபியா இம்மாதம் 31ம் தேதி முதல் ஷார்ஜாவில் இருந்து புதுடெல்லிக்கு விமான சேவையைத் துவக்க உள்ளது.

இந்தியாவில் முதல் சேவையாக கடந்த ஆண்டில் கோழிக்கோடுக்கு தங்கள் நிறுவனம் விமான சேவையைத் தொடங்கியதாகவும், இந்தியாவில் தங்களது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் தற்போது புதுடெல்லிக்கான சேவையைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஏர் அரேபியா நிறுவன வர்த்தகப் பிரிவு தலைவர் ஏ.கே. நிஸார் தெரிவித்துள்ளார்.

துவக்கத்தில் புதுடெல்லிக்கும், ஷார்ஜாவிற்கும் இடையே வாரத்திற்கு 4 முறை விமான சேவை இயக்கப்படும் என்றும், வரும் மே மாதத்தில் இருந்து அன்றாட சேவையாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோவை, ஜெய்ப்பூர், கொச்சி, கோழிக்கோடு, மும்பை, நாக்பூர், திருவனந்தபுரத்திற்கு ஏர் அரேபியா நிறுவனம் விமான சேவைகளை இயக்கி வருகிறது.

Monday, March 3, 2008

கார், பைக் விலை குறைகிறது

தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கார்கள் மற்றும் பைக்குகள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும்.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்த 2008-09 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்,
இரு சக்கர வாகனங்கள் மீதான கலால் வரி 16 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவித்தார்.இதனால் பைக்குகளின் விலையும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று கார்கள் மீதான வரியும் 2 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவித்தார்.இந்த வரி குறைப்பு காரணமாக சிறிய கார்களின் விலை ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை குறையலாம்.

(மூலம் - வெப்துனியா)

கல்விக் கடன் ஒரே மாத்தில் வழங்கப்படும் : ப. சிதம்பரம்

கல்விக்கடன் ஒரே மாதத்தில் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது :

பொதுத் துறை வங்கிகளுக்கு கல்விக்கடன் வழங்க 15 முதல் 30 நாட்கள் தேவைப்படுகிறது.அதே சமயம் கல்விக்கடனை இணைய தளம் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் பொதுத் துறை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)

தங்கத்தின் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது

சர்வதேச சந்தையில் இன்று ஏற்பட்ட உயர்வு காரணமாக தங்கத்தின் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 959 அமெரிக்க டாலராக உயர்ந்த நிலையில், ஆசிய சந்தையிலும் தங்கத்திற்கான தேவைப்பாடு இன்று மிக அதிகமாக காணப்பட்டது.

இதன் எதிரொலியாக மும்பை மற்றும் சென்னை சந்தைகளில் தங்கத்தின் விலை இன்று காலை வர்த்தகம் தொடங்குபோதே 10 கிராமுக்கு முறையே ரூ. 12, 290 மற்றும் ரூ. 12, 245 ஆக காணப்பட்டது.

பின்னர் இதுவரை இல்லாத அளவிற்கு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 12, 415 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

(மூலம் - வெப்துனியா)