Monday, February 25, 2008

ஃபோர்டு புதிய கார் அறிமுகம்

ஃபோர்டு மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய மாடல் காரான `ஃபோர்டு எண்டவர் தண்டர் பிளஸ்' என்ற காரினை அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகவும் அதிதிறன் வாய்ந்த முற்றிலும் புதிய உட்புற வடிவமைப்புடன் கூடிய இந்த காரின் விலை 17 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் (டெல்லி ஷோரூம்).

16 வால்வ் டிஓஹெச்சி உடன் 3 லிட்டர் டர்போ டெசல் காமன் - ரயில் இன்ஜெக்சன் (டிடிசிஐ) என்ஜினுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

2 பரிமாணங்களில் ஏறக்குறை ஒரே அளவில் எண்டவர் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வகைக் கார்கள் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த சில தினங்களில் மற்ற முக்கிய நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.