Monday, February 25, 2008

இணையதளத்தை கண்டுபிடித்த திமோதி

இன்றைய தினம் அரிச்சுவடிகளான ஏ,பி,சி அல்லது அ,ஆ,இ தெரிகிறதோ இல்லையோ சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அட்சரம் www என்றால் அது மிகையாகாது.

உலகம் அனைவரது கையிலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ-யையே சேரும்.

கடந்த 1990ம் ஆண்டில் இவர், தனது உடன் இருந்த ராபர்ட் கயிலியோ என்பவரின் துணையுடன் வேர்ல்ட் வைட் வெப் என்ற தகவல் சேகரிப்பு பிராஜக்டை ஏற்படுத்தியதன் விளைவாகவே இணைய தளம் என்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகத்தை நம்மால் இப்போது பயன்படுத்த முடிகிறது.

திமோதியின் இந்த அரிய கண்டுபிடிப்புக்காக லண்டனைச் சேர்ந்த அவருக்கு, ராணி இரண்டாவது எலிசபெத் மிகப்பெரிய அந்தஸ்தை சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் அளித்துள்ளார்.

லண்டனில் பிறந்த பெர்னர்ஸ்-லீ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் குயின்ஸ் கல்லூரியில் பயின்றார். பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டரை பயன்படுத்த லீ-க்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து அவர், தொலைக்காட்சி பெட்டி மற்றும் புதிய கம்ப்யூட்டரை வடிவமைத்தார்.

இதற்காக சால்டரிங் கருவியைப் பயன்படுத்திய போதுதான் கண்டுபிடிப்புகள் பற்றி யோசிக்கத் துவங்கினார்.

வேர்ல்டு வைடு வெப்-ஐ லீ உருவாக்கும் முன்பாக புரோகிராமர் ஆகவும், சாஃப்ட்வேர் டைப் செட்டிங்கிலும், ஆபரேட்டிங் சிஸ்டம் துறையிலும் கடந்த 1980-களில் அவர் பணி புரிந்துள்ளார்.

ஐரோப்பிய நிறுவனம் ஒன்றில் பெர்னர்ஸ்-லீ பணியாற்றும் போது ஹைபர் டெக்ஸ்ட் அடிப்படையிலான பிராஜக்ட்டின் போது வேர்ல்டு வைடு வெப்-க்கான ஐடியா கிடைத்தது.

தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பங்கீடு செய்து, அப்டேட் செய்யும் வகையிலான புரோட்டோ டைப் சிஸ்டம் என்குயர் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. இந்த புரோகிராம் வெளியிடப்படாவிட்டாலும் வேர்ல்டு வைடு வெப்-க்கான ஆதாரமாக அமைந்தது.

அதன் பிறகு உலகின் முதல் இணைய தளம் (வெப் சைட்) உருவாக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்குச் சென்றது, வெப் சர்வருக்கு http என அழைக்கப்பட்டு டிசம்பர் 1990ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது உள்ள வெப் கேமரா போன்ற நவீன வசதிகள் அப்போது அதில் இருந்திருக்கவில்லை

:::Thanks- MSN.com ::::