Monday, February 25, 2008

மாணவர்கள் பயன்படுத்த இலவச மென்பொருட்கள்

மென்பொருள் நிரல்களை உருவாக்குவதற்கும், செறிவான இணையதளங்களை வடிவமைக்கவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மாணவர்களுக்கு தங்களது மென்பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இதன்மூலம் அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் நேருக்கு நேர் வர்த்தகப் போட்டியில் இறங்கியுள்ளது மைக்ரோசாஃப்ட்.

மென்பொருள் நிரல்களை டவுன்லோடு செய்யும் விதமாக விஷுவல் ஸ்டூடியோ புரொபஷனல் (Visual Studio Professional) பதிப்பை மாணவர்கள் டவுன்லோடு செய்து பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டூடியோவில் கிராஃபிக் டிசைன், வெப்சைட் மற்றும் கலப்பு வெப்-டெஸ்க்டாப் நிரல்கள் வடிவமைப்பு உபகரணங்கள் உள்ளது.

மேலும் சிறப்பாக, எக்ஸ்.என்.ஏ கேம் ஸ்டூடியோ 2.0 ( XNA Game Studio 2.0) என்ற வீடியோ கேம் வடிவமைப்பு நிரலையும் இலவசமாக வழங்கியுள்ளது. எச்.கியூ.எல். சர்வர் 2005 பதிப்பையும், விண்டோஸ் சர்வர் ஸ்டாண்டர்ட் பதிப்பையும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக விட்டுக் கொடுத்துள்ளது.

முன்பு இந்த புரோகிராம்களுக்கு கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் அதிக மாணவர்கள் இதனை பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது ட்ரீம்ஸ்பார்க் என்று அழைக்கப்படும் இந்த இலவச மென்பொருள் வழங்கலை மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் இலவசமாக வழங்குவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், வேறு பல பயன்கள் உள்ளதாக அவர் கூறினார்.