Tuesday, February 12, 2008

மின்னஞ்சல் சேவை: ஏர்செல் - எரிக்ஸன் ஒப்பந்தம்

மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்தில் அடங்கிய ஏர்செல் நிறுவனத்துடன், வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் சேவைக்காக எரிக்ஸன் நிறுவனம் முதல் முறையாக கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என்றும், இதற்கான முழு பொறுப்பையும் எரிக்ஸன் ஏற்றுக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஸ்டம்ஸ் ஒருங்கிணைப்பு, நிர்வாகம், செயல்பாடு மற்றும் பராமரிப்பும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

ஏற்கனவே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும், வர்த்தக அடிப்படையிலான தொடக்கம் 2008ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸ் / எம்எம்எச் அடிப்படையிலான எரிக்ஸனின் மின்னஞ்சல் சேவையால் வாடிக்கையாளர்கள் பாப்3ல் இருந்து மொபைல் போன்களிலேயே மின்னஞ்சல்களைப் பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.