ஹைதராபாத்தில் 2வது மையம்: டிசிஎஸ் துவக்கம்
தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தனது 2வது சர்வதேச வினியோக மையத்தை (Global Delivery Center) ஹைதராபாத்தில் திறந்துள்ளது.
சினர்ஜி பார்க் (Synergy Park) எனப் பெயரிடப்பட்டுள்ள இம்மையம், 8,000 பணிபுரியும் வகையில், 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்-ஆளுமை, ஊடக சேவை, வங்கி மற்றும் சில்லரை வணிகம், டெலிகம்யூனிகேஷன் மற்றும் தகவல்தொழில்நுட்ப சேவைகளுக்கு தேவையான மென்பொருள் தீர்வைகளை இந்த மையம் வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டமத்திற்கான அங்கீகாரம் பெற்றுள்ள இந்த டிசிஎஸ் மையத்தை, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, February 12, 2008
ஹைதராபாத்தில் 2வது மையம்: டிசிஎஸ் துவக்கம்
Labels:
Article,
Asia,
India,
Information Technology,
Thamil Nadu