செல்போன் தயாரிப்புத் துறையில் உள்ள கொரிய நிறுவனமான எல்ஜி, தொடுதிரை (டச்-ஸ்கிரீன்) வசதியுடையை நவீன செல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஸ்பெய்னில் உள்ள பார்சிலோனாவில் நடந்த உலக மொபைல் மாநாடு மற்றும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன், 3 இன்ச் அகல தொடுதிரையை கொண்டுள்ளது.
கேஎப்-700 (KF-700) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்லைடர் (slider phone) ரக செல்போன் விரைவில் விற்பனைக்கு வரும் என எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் தனது மொபைல் விற்பனையை 25 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ள எல்ஜி நிறுவனம், நடப்பாண்டில் 100 மில்லியன் செல்போன்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.