ஹைதராபாத்: நாஸ்காம் நிறுவனத்தின் குளோபல் இந்தியன் விருது டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவுக்குக் கிடைத்துள்ளது.
நாஸ்காம் நிறுவனத்தின் சார்பில் 2008ம் ஆண்டுக்கான குளோபல் தலைவர்கள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரத்தன் டாடாவுக்கு குளோபல் இந்தியன் விருது கிடைத்துள்ளது.
மும்பையில் வருகிற 14ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
குளோபல் இந்தியன் விருது தவிர பிசினஸ் டிரான்ஸ்பார்மேஷன் விருது, பிசினஸ் லீடர் விருது ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஸ் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரி வில்லி வால்ஷுக்கு, பிசினஸ் டிரான்ஸ்பார்மேஷன் விருதும், சிஸ்கோ தலைவர் ஜான் சாம்பர்ஸுக்கு பிசினஸ் லீடர் விருதும் கிடைத்துள்ளது.
இந்த விழாவில் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் நடைபெறும் என நாஸ்காம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tuesday, February 12, 2008
ரத்தன் டாடாவுக்கு குளோபல் இந்தியன் விருது
Labels:
Article,
Asia,
India,
Thamil Nadu