இணையதளம் மூலம் விற்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு ஆகியவை அதிகரித்துள்ளதோடு, பணம் செலுத்தும் முறையும் எளிதாக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் ஷாப்பிங் இன்றைய காலங்களில் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் இந்தியர்கள், அதிகம் கொள்முதல் செய்பவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர்.
துருக்கி மற்றும் அயர்லாந்து இணையவாசிகளுக்கு அடுத்தபடியாக இந்திய இணையவாசிகள் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ஆய்வுகளை சிறப்பன முறையில் செய்து வருவதாக கருதப்படும் நீல்சன் இந்த ஆய்வை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. உலகில் இணையதளம் பயன்படுத்துவோரில் 85 சதவீதத்தினர், ஆன்லைன் கொள்முதல் செய்வதாக நீல்சன் ஆய்வு தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பாக கடன் அட்டை மூலம் பொருட்களை இணையதளம் மூலம் வாங்கிக் குவிக்கும் போக்கு அதிகம் காணப்படுவதாக தெரிகிறது. நமது நாட்டு பெருந்தகைகள்தான் இப்படி என்று அல்ல துருக்கி இணையவாசிகள் 91 சதவீதமும், அயர்லாந்து இணையவாசிகள் 86 சதவீதமும் கடன் அட்டையை பயன்படுத்துவதில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.
ஐக்கிய அரபு நாடுகளின் இணையவாசிகளும் இதற்கு சளைத்தவர்களல்லர். அவர்களில் 84 சதவீதத்தினர் கடன் அட்டை மூலம் இணையதள ஷாப்பிங் செய்து பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.
உலககெங்கும் 60 சதவீத இணையவாசிகள் 60 சதவீதத்தினர் தங்கள் கடன் அட்டை மூலமே பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 53 சதவீதம் விசா கார்டு பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
Tuesday, February 12, 2008
ஆன்லைன் ஷாப்பிங்: இந்தியர்கள் 3ம் இடம்
Labels:
Article,
Asia,
India,
Information Technology,
Thamil Nadu