Thursday, January 31, 2008

பார்தி ஏர்டெல் நிகர லாபம் 36% உயர்வு

பார்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனத்தின் இந்த ஆண்டின் 3வது காலாண்டு நிகரலாபம் 36 சதவீதம் உயர்ந்து ரூ. 1,419.84 கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,043.69 கோடியாக இருந்தது என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.
3-வ்து காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 41.47 சதவீதம் உயர்ந்து ரூ. 6,682.57 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் இதே காலத்தில் ரூ. 4,723.68 கோடியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
வயர்லெஸ் சந்தையில் பார்தி ஏர்டெல் தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும், இந்த வளர்ச்சி மேலும் ஊக்கம் அளிக்கக்கூடிய அளவுக்கு நிறுவனத்தின் செயல்பாடு இருக்கும் என்றும் கூறிய அவர், குறிப்பாக இந்தியாவின் ஊரகப்பகுதிகளில் ஏர்டெல் விரிவாக்கத் திட்டத்தால் தொலைத்தொடர்புத் துறையில் வலுவான நிலையை எட்டும் என்றார்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் மொத்தம் 5 கோடியே 70 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதாகவும், கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த மொத்த வாடிக்கையாளர்களைக் காட்டிலும் 70 சதவீத உயர்வாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-AIRTEL NEWS FROM MSN TAMIL