டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் இணை நிறுவனமான டிலிஜென்டா (Diligenta), கனடாவின் சன் லைப் பைனான்சியல் நிறுவனத்திற்கு பிபிஓ துணை சேவைகளை வழங்குவதற்கான 200 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி வரும் மே மாதம் முதல், பிபிஓ துணை சேவைகளை டிலிஜென்டா நிறுவனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிலிஜென்டா நிறுவனம், சன் லைப் பைனான்சியல் தலைமையகமான பசிங்ஸ்டோக் பகுதியில் இருந்தே பிபிஓ துணை சேவையை வழங்கும் என கூறப்படுகிறது.
200 மில்லியன் டாலர் ஒப்பந்தம் கிடைத்ததை தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையில் உள்ள டிசிஎஸ் நிறுவன பங்குகளின் விலை 1.06 சதவீதம் அதிகரித்து ரூ.863.25 ஆக உயர்ந்துள்ளன.
msn-tamil
msn-tamil