இந்தியாவின் பி.பி.ஓ. துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என்றும், வரும் 2012-ம் ஆண்டில் இத்துறையில் மொத்தம் ஒரு கோடி பேர் பணியாற்றுவார்கள் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
எவரெஸ்ட் குழுமத்துடன் இணைந்து நாஸ்காம் நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இந்திய பி.பி.ஓ நிறுவனங்கள் உள்ளதாகவும், இதேநிலை தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் துறை 5 மடங்கு வளர்ச்சியை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இத்துறையின் வர்த்தகம் ரூ.44,000 கோடியாக உள்ளதாகவும், வரும் 2012-க்குள் ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் நாஸ்காம் தலைவர் சாம் மிட்டல் தெரிவித்துள்ளார்.
இத்துறையில் உலகின் 25 நாடுகளில் சுமார் 7 லட்சம் பேர் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆய்வு எதிர்கால வாய்ப்புகள் தொடர்பாக அறிந்து கொள்ள மட்டும் நடத்தப்படவில்லை என்று கூறிய சாம் மிட்டல், இதனை எட்டுவதற்கு தொடர்புடைய அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கூறவே நடத்தப்பட்டது என்றார்.
NEWS By MSN TAMIL
NEWS By MSN TAMIL