இருசக்கர வாகன தயாரிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனமான ஹீரோ ஹோண்டா, தனது நிறுவன பைக்குகளின் விலையை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்த ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் கன்ட் முஞ்சால், மூலப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், பைக்குகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
கடந்த வாரம் முதலே இந்த விலையுயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதன்படி அந்நிறுவன பைக்குகளின் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.