Tuesday, April 29, 2008

இந்தியாவில் ஜப்பான் டயர் நிறுவன ஆலை

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோக்ஹாமா டயர் கம்பெனி அரியானா மாநிலத்தில் புதிதாக டயர் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
தொடக்க நிலையில் இத்தொழிற்சாலையில் ரூ.965 கோடி முதலீடு மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்நிறுவனம் ஆண்டுக்கு 420 கோடி டாலர் (சுமார் ரூ.16,800 கோடி) விற்றுமுதலைக் கண்டு வருகிறது.
இத்தொழிற்சாலைக்காக இந்நிறுவனம், புதுடெல்லியிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகதூர்கார் தொழிற்பேட்டையில் 25 ஏக்கர் நிலத்தைப் பெற்றுள்ளது. இது இந்தியாவிலேயே மோட்டார் வாகன டயர்களுக்கான மிகப் பெரிய சில்லரை விற்பனை சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு யோக்கஹாமா நிறுவனம் ஒரு முழுமையான டயர் உற்பத்தி பிரிவை அமைப்பதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு ஒன்றையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோக்கஹாமா நிறுவனம் சர்வதேச அளவில் ஏழாவது பெரிய டயர் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் ஐரோப்பா, அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.