வரும் ஜனவரிக்குள் "3ஜி' தொலைதொடர்பு சேவை நடைமுறைக்கு வரும் என்று மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அசோசம் அமைப்பின் சர்வதேச தொலைதொடர்புத் துறை உச்சி மாநாட்டில் பேசும்போது அமைச்சர் இத் தகவலைக் கூறினார்.
இன்டர்நெட் தொடர்பு வேகமாகக் கிடைக்க இந்த 3ஜி தொலை தொடர்பு சேவை பெரும் உதவியாக இருக்கும்.
3ஜி சேவைக்கான வழிகாட்டி நெறிமுறை வரைவு நகல் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. வழிகாட்டி நெறிமுறைகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் கூறினார்.
3ஜி தொலைதொடர்பு சேவையில் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் தற்போதுள்ள தொலைதொடர்பு நிறுவனங்களையும் பங்கு பெற அனுமதிக்குமாறு ட்ராய் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது.
அலைவரிசை ஒதுக்கீடு ஏலத்தில் (நல்ங்ஸ்ரீற்ழ்ன்ம் ஹன்ஸ்ரீற்ண்ர்ய்) அன்னிய நிறுவனங்கள் பங்கு பெற அனுமதிப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் விவாதிக்க இருப்பதாக அமைச்சர் கூறினார்.
அன்னிய நிறுவனங்களை அனுமதிப்பதில் பிரச்னையில்லை. தொலை தொடர்புத் துறையில் 74 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளது என்றார் அமைச்சர் ராசா.
Tuesday, May 27, 2008
ஜனவரிக்குள் "3ஜி' தொலைதொடர்பு சேவை
Labels:
Information Technology